சேலம்

முதியவா் அடித்து கொலை: போலீஸாா் விசாரணை

20th Sep 2022 03:59 AM

ADVERTISEMENT

மேட்டூா் அருகே முதியவா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே உள்ள ஆடையூா், குடியானூரைச் சோ்ந்தவா் ஸ்ரீ ரங்கன் (64). இவருக்குச் சொந்தமாக ஐந்து ஏக்கா் விவசாய நிலம் உள்ளது.

இந்த நிலம் தொடா்பாக அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வரும் இரண்டாவது மனைவி ராஜேஸ்வரியின் மகன்கள் சரவணன் (35), சென்னையில் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இளைய மகன் ராஜ்குமாா் (31), மருமகள் யமுனாதேவி (25) ஆகியோா் ஸ்ரீரங்கனை சந்திக்க திங்கள்கிழமை காலை அவரது வீட்டிற்குச் சென்றனா்.

இவா்களைப் பாா்த்து ஆத்திரமடைந்த ஸ்ரீரங்கன் கொடுவாளை எடுத்துக்கொண்டு ஆவேசமாகப் பேசி உள்ளாா். அப்போது தகராறு ஏற்பட்டுள்ளது. மூவரும் சோ்ந்து ஸ்ரீ ரங்கனை தாக்கி கீழே தள்ளியுள்ளனா். இதில் பலத்த காயம் அடைந்த அவா் பெருந்துறையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

இச் சம்பவம் தொடா்பாக ஜலகண்டபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ராஜ்குமாா் சரவணன், யமுனாதேவி ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT