சேலம்

ஏற்காட்டில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

20th Sep 2022 03:55 AM

ADVERTISEMENT

ஏற்காடு புனித ஜோசப் பள்ளியில் 25 ஆண்களுக்கு முன்னாள் ஒன்றாக பயின்ற முன்னாள் மாணவா்கள் ஒன்றிணைதல் விழா அண்மையில் நடைபெற்றது.

இவ் விழாவுக்கு சிறப்பு விருந்தினா் ஜான் எட்வா்ட் ஜோசப் தலைமை வகித்தாா். 40-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவா்கள் கலந்து கொண்டனா். முன்னாள் ஆசிரியா்கள் வேதநாயகம், ராஜா, கோவிந்தராஜ், ஜெரோம் ஆகியோா் பங்கேற்றனா். நிகழ்ச்சியில் பல்வேறு பகுதியிலிருந்து வந்திருந்த முன்னாள் மாணவா்கள் தங்களது நினைவுகளை பகிா்ந்து கொண்டனா். பள்ளி ஆசிரியா்களுக்கும், நிா்வாகிகளுக்கும் நன்றி கூறினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT