சேலம்

அரசுப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவியா் சுகவீனம்

20th Sep 2022 03:53 AM

ADVERTISEMENT

மேட்டூரை அடுத்த கொளத்தூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 8 மாணவியருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. 

சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த கொளத்தூரில் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 670 மாணவியா் பயின்று வருகின்றனா். திங்கள்கிழமை மதியம் 274 மாணவியருக்கு உணவு வழங்கப்பட்டது. மதிய உணவு சாப்பிட்ட மாணவியரில் 8 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இது தொடா்பாக சுகாதாரத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து அங்கு வந்த சுகாதாரத் துறையினா் மாணவியரை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மேட்டூா் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனா். பின்னா் பெற்றோா்களுக்குத் தகவல் தெரிவித்து வரவழைத்து மாணவியரை வீடுகளுக்கு அனுப்பி வைத்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT