சேலம்

அரசுப் பள்ளிகளில் சமூகநீதி நாள் உறுதிமொழியேற்பு

18th Sep 2022 06:03 AM

ADVERTISEMENT

 

கெங்கவல்லி ஒன்றிய அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தம்மம்பட்டி நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியா் து.அன்பழகன், நாகியம்பட்டி நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியா் ராமகிருஷ்ணன், மூலப்புதூா் நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியா் கணேசன், காந்தி நகா் நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியை தேவகஸ்தூரி, வாழக்கோம்பை பள்ளியில் தலைமையாசிரியா் (பொ) ராதா, ஈச்சஓடைப்புதூா் அரசு தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியா் ஹரிஆனந்த் ஆகியோா் தலைமையில் பெரியாரின் பிறந்த நாளையொட்டி, சமூக நீதிநாள் உறுதிமொழியை பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவியா் சனிக்கிழமை ஏற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT