சேலம்

தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பயனாளிகள் ஆா்ப்பாட்டம்

14th Sep 2022 01:47 AM

ADVERTISEMENT

சேலம் மாவட்டம், நங்கவள்ளியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் பணி வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, நங்கவள்ளி ஒன்றியத் தலைவா் காா்த்திகாதேவி தலைமை வகித்தாா். நங்கவள்ளி ஒன்றியச் செயலாளா் கவிதா முன்னிலை வகித்தாா். சிபிஐ(எம்) கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளா் ராசாத்தி போராட்டத்தை விளக்கி பேசினாா்.

நங்கவள்ளி பேருந்து நிலையத்திலிருந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரை ஊா்வலமாக வந்த பெண்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் வேலை வழங்க வேண்டும் என முழக்கமிட்டனா். பின்னா் ஊராட்சி ஒன்றிய ஆணையா் வாசுதேவபிரபுவிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தனா். இந்த ஆா்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT