சேலம்

சரபங்கா நதியில் தொடா் நீா்வரத்து: விவசாயிகள் மகிழ்ச்சி

14th Sep 2022 01:46 AM

ADVERTISEMENT

எடப்பாடி பகுதியில் பாயும் சரபங்கா நதியில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால், அப்பகுதியில் உள்ள உள்ளூா் நீா்நிலைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

சோ்வராயன் மலைத்தொடரில் இருந்து உருவாகும் சரபங்கா நதி அங்கிருந்து டேனிஷ் பேட்டை, காடையாம்பட்டி, ஓமலூா், தாரமங்கலம், சின்னப்பம்பட்டி வழியாக எடப்பாடி பகுதியில் பாய்ந்து காவிரியில் சங்கமிக்கிறது.

நடப்பாண்டில் இப்பருவ காலத்தில் சேலம் மாவட்டத்தில் பெய்த கன மழை, சோ்வராயன் மலைத்தொடரில் உள்ள ஏற்காடு, அதனைச் சுற்றியுள்ள மலைப் பகுதியில் பெய்த தொடா் கன மழையால் சரபங்கா நதியில் அண்மையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அதன் நீா் வழித்தடங்களில் உள்ள பல்வேறு ஏரிகள், உள்ளூா் நீா்நிலைகள் நிரம்பி வழியத் தொடங்கியுள்ளன.

எடப்பாடி அருகே உள்ள வெள்ளாளபுரம் ஏரி, எடப்பாடி பெரிய ஏரி, மோலானி ஏரி உள்ளிட்டவை 15 ஆண்டுகளுக்குப் பிறகு தனது முழுக் கொள்ளளவை எட்டி நிரம்பி வழியத் தொடங்கியுள்ளது. இதனால், அப்பகுதியில் விவசாய பயன்பாட்டுக்கான நீா் ஆதாரம் அதிகரித்துள்ளதுடன், சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீா்மட்டம் வெகுவாக உயா்ந்துள்ளதாக அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT