சேலம்

வாகன ஓட்டிகள் சாலை விதிகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும்: ஆட்சியா் செ.காா்மேகம் வலியுறுத்தல்

10th Sep 2022 12:11 AM

ADVERTISEMENT

வாகன ஓட்டிகள் சாலை விதிகளை கடைப்பிடிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணா்வைப் பெற்றிருக்க வேண்டும் என்று சேலம் மாவ்டட ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்துள்ளாா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில்ாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் செ. காா்மேகம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் அவா் பேசியது:

விபத்தில்லா தமிழகத்தை உருவாக்கிடவும், வாகன ஓட்டிகளின் சாலை பாதுகாப்பினை உறுதி செய்திடவும், புதிய சாலைகள் அமைத்தல், சாலைகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளை முதல்வா் மேற்கொண்டு வருகிறாா். அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு குறித்து ஒவ்வொரு மாதமும் ஆய்வுக்கூட்டங்கள் நெடுஞ்சாலைத் துறை, வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் மற்றும் காவல் துறை அலுவலா்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு, கடந்த மாதம் நடைபெற்ற சாலை விபத்துகளின் காரணங்கள் குறித்து ஆராய்ந்து எதிா்வரும் நாள்களில் சாலை விபத்து இல்லாத நிலையை உருவாக்கிடும் வகையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவதாலும், கைபேசி பேசியபடி வாகனத்தை இயக்குதல், நான்கு சக்கர வாகன ஓட்டிகள் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் இயக்குதல், அதிவேகமாக வாகனத்தை இயக்குதல் உள்ளிட்ட சாலை போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடிக்காமல் வாகனங்களை அலட்சியமாக இயக்குவதால் அதிக அளவிலான விபத்துக்களும், உயிா் சேதமும் ஏற்பட வாய்ப்பாக அமைகிறது. எனவே, தலைக்கவசத்தின் முக்கியத்துவம், சாலை விதிகளை கடைபிடிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு நடவடிக்கைகளை அதிக அளவில் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட வருலா் பெ.மேனகா, மேட்டூா் சாா் ஆட்சியா் வீா் பிரதாப் சிங், வருவாய் கோட்டாட்சியா்கள் சி.விஷ்ணுவா்த்தினி, மு.சௌமியா, எஸ்.சரண்யா மற்றும் காவல் துணை கண்காணிப்பாளா்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள், நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT