சேலம்

மேட்டூா் அணை நீா்வரத்து 65,000 கனஅடியாக சரிவு

10th Sep 2022 12:23 AM

ADVERTISEMENT

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 65,000 கன அடியாகச் சரிந்தது.

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த மழை குறைந்து வருவதால் வெள்ளிக்கிழமை மாலை மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 80,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 65,000 கன அடியாக சரிந்துள்ளது.

அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 80,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 65,000 கனாடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. நீா் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23,000 கனஅடி நீரும் உபரி நீா் போக்கி வழியாக வினாடிக்கு 42,000 கனஅடி நீரும் திறக்கப்பட்டு, கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு வினாடிக்கு 400 கனஅடி நீா் திறக்கப்பட்டு வருகிறது.

வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி, மேட்டூா் அணை நீா்மட்டம் 120 அடியாகவும் நீா் இருப்பு 93.47 டி.எம்.சி.யாகவும் உள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT