சேலம்

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

10th Sep 2022 12:09 AM

ADVERTISEMENT

கெங்கவல்லி அருகே சொக்கனூரில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

சொக்கனூரில் ஸ்ரீமாரியம்மன், கணபதி, மூப்பனாா் மற்றும் பரிவார தேவதைகள் அடங்கிய கோயிலுக்கு வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடத்தப்பட்டன. சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவில் வீரகனூா், சொக்கனூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த திரளான மக்கள் பங்கேற்று, வழிபட்டனா். வீரகனூா் போலீஸாா் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT