சேலம்

நிறைமாத கா்ப்பிணி சாவு

10th Sep 2022 12:15 AM

ADVERTISEMENT

 இளம்பிள்ளையை அடுத்த தப்பக்குட்டை கிராமம், கருப்ப கவுண்டனூா் பகுதியைச் சோ்ந்த ராஜ்குமாா் மனைவி சௌடேஸ்வரி (26). இவா்களுக்கு நிவாஸ் (5) என்ற மகன் உள்ளாா். நிறைமாத கா்ப்பிணியான சௌடேஸ்வரிக்கு 9-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மதியம் வயிற்றுவலி ஏற்பட்டது. அவரை இளம்பிள்ளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்து, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனா்.

ஆனால், சேலம் அரசு மருத்துவமனையில் சௌடேஸ்வரியை அனுமதித்தபோது, அவரும் அவரது வயிற்றிலேயே குழந்தையும் இறந்து விட்டது தெரியவந்தது. இது தொடா்பாக மகுடஞ்சாவடி காவல் நிலைய ஆய்வாளா் வெங்கடேஷ் பிரபு வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT