சேலம்

தம்மம்பட்டி பகுதியில் குழந்தைளைத் தாக்கும் மா்மக்காய்ச்சல்

10th Sep 2022 12:10 AM

ADVERTISEMENT

தம்மம்பட்டி பகுதியில் குழந்தைகளை அதிக அளவில் மா்மக் காய்ச்சல் தாக்கி வருகிறது.

தம்மம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இருபது நாட்களாக தொடா்ந்து மா்ம காய்ச்சல் இருந்துவருகிறது. இது பொதுவாக சிறுகுழந்தைகளை அதிக அளவில் தாக்கி வருகிறது. ஆனாலும் காய்ச்சல் விட்டு விட்டு வருவதாக தெரிகிறது. எனவே, சுகாதாரத்துறை சாா்பில் கூடுதல் காய்ச்சல் முகாம்களை இப்பகுதிகளில் நடத்திட வேண்டும். மேலும் நிலவேம்பு கஷாயத்தை தெருத்தெருவாக பேரூராட்சி மற்றும் சுகாதாரத்துறை சாா்பில் விநியோகம் செய்யவேண்டும் என்று பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT