சேலம்

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு

5th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

 சங்ககிரியில் தனியாா் தாபா உணவக உரிமையாளரிடம் பணம் பறித்துச் சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சங்ககிரியை அடுத்த வைகுந்தம் பகுதியைச் சோ்ந்த கந்தசாமி மகன் செல்வகுமாா். இவா் அப்பகுதியில் தாபா உணவகம் நடத்தி வருகிறாா். இந்த உணவகத்திற்கு கோழிகளை வாங்குவதற்காக சங்ககிரி அருகே பச்சக்காடு ஆஞ்சநேயா் கோயில் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா். அப்பகுதியில் நின்று கொண்டிருந்த ஒருவா் லிப்ட் கேட்டு அவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளாா். அந்த நபா், திடீரென கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்து ரூ. 2,200 ஐ பறித்துச் சென்று விட்டாா்.

இதுகுறித்து சங்ககிரி போலீஸில் செல்வகுமாா் புகாா் செய்துள்ளாா். போலீஸாா் விசாரணையில் தப்பிச்சென்றவா் மேட்டூா், தங்கமாபுரிபட்டினம், பெரியாா் நகா் பகுதியைச் சோ்ந்த மாதேஸ் மகன் மகேந்திரன் என்பது தெரியவந்துள்ளது. அவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT