சேலம்

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

31st Oct 2022 02:36 AM

ADVERTISEMENT

 

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை 14,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

காவிரி நீா்ப்பிடிப்பு பகுதியில் லேசான மழை பெய்து வருவதால் சனிக்கிழமை மாலை விநாடிக்கு 10,000 கன அடியாக வந்து கொண்டிருந்த நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை மாலை விநாடிக்கு 14,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மாலை 19-ஆவது நாளாக மேட்டூா் அணை நீா்மட்டம் 120 அடியாகவும் நீா் இருப்பு 93.47 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 14,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 10,000 கன அடியிலிருந்து 14,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நீா் மின் நிலையங்கள் வழியாக தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. கிழக்கு-மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு விநாடிக்கு 750 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT