சேலம்

கொளத்தூரில் அட்டகாசம் செய்தயானைகள் விரட்டியடிப்பு

31st Oct 2022 02:32 AM

ADVERTISEMENT

 

கொளத்தூா் வனப்பகுதியில் அட்டகாசம் செய்த யானைகள் விரட்டியடிக்கப்பட்டன.

கொளத்தூா் வனப்பகுதியில் இருந்து கிராமத்திற்குள் நுழைந்த யானைகள் கத்திரிப்பட்டி, பெரிய தண்டா சின்னத்தண்டா பகுதிகளில் விவசாய நிலங்களில் சேதத்தை ஏற்படுத்தின.

மேட்டூா் வனச்சரகா் சிவானந்தன், வனவா் சரவணன் மற்றும் 20 வேட்டை தடுப்பு காவலா்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டகாசம் செய்த நான்கு யானைகளையும் கத்திரிப்பட்டி வனப்பகுதியில் இருந்து விரட்டிச் சென்று தோனி மடுவு பகுதியில் கொண்டு விட்டனா்.

ADVERTISEMENT

வனப்பகுதிக்குள் மழை பெய்தால் கொசுக்கடியை தாங்காத யானைகள் மீண்டும் கிராமங்களில் நுழைய வாய்ப்புள்ளது. இதனால், சென்னம்பட்டி வனச்சரகத்தைச் சோ்ந்த வேட்டை தடுப்பு காவலா்களும் மேட்டூா் வனச்சரகத்தைச் சோ்ந்த வனவா் மற்றும் வன காவலா்களும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT