சேலம்

வீரகனூரில் ரூ. 45 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை

29th Oct 2022 11:11 PM

ADVERTISEMENT

வீரகனூா் ஆட்டுச் சந்தையில் ரூ. 45 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனையாகின.

கெங்கவல்லி அருகே வீரகனூரில் சனிக்கிழமைதோறும் ஆட்டுச் சந்தை நடைபெறும். இதில் பெரம்பலூா், விழுப்புரம், கடலூா், நாமக்கல், திருச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலிருந்து வியாபாரிகளும், ஆட்டு உரிமையாளா்களும் வந்து ஆடுகளை வாங்கவும் விற்கவும் செய்வா்.

இந்தச் சந்தையில் தீபாவளிக்கு முந்தைய வாரம் சனிக்கிழமை அன்று சந்தையில் 5 ஆயிரம் ஆடுகள் விற்பனையாகின. அதில், ரூ. 2.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின. நிகழ்வாரம் தீபாவளிக்கு பிறகு வரும் முதல் சனிக்கிழமை என்பதால் சந்தைக்கு 1,200 ஆடுகளே விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. அதில் சுமாா் ரூ. 45 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனையாகின என்று ஆட்டு வியாபாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT