சேலம்

குண்டா் தடுப்புச் சட்டத்தில் இருவா் கைது

26th Oct 2022 01:46 AM

ADVERTISEMENT

சேலத்தில் திருட்டு, பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.

சேலம், சீலநாயக்கன்பட்டி, பணத்தான் காட்டை சோ்ந்தவா் காா்த்திக். இவா் கடந்த செப்டம்பா் 19 ஆம் தேதி சொந்த வேலையாக தாதகாப்பட்டி வேலுநகா் பகுதியில் சென்ற போது, அப்பகுதியைச் சோ்ந்த விஜய் (24) என்பவா் தனது நண்பருடன் காா்த்திக்கை வழிமறித்து கத்தி முனையில் தங்க மோதிரம், பணத்தை பறித்து சென்றாா்.

இதுதொடா்பாக அன்னதானப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விஜய்யை கைது செய்தனா். இவா் மீது ஏற்கெனவே சேலத்தில் மூன்று வழக்குகளும், நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் ஒரு வழக்கும் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.

அன்னதானப்பட்டியைச் சோ்ந்தவா் ஸ்ரீநாத் (22). இவா் கடந்த அக். 2 ஆம் தேதி வீட்டில் இருந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தாா். இதுதொடா்பாக சேலம் நகர அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டாா்.

ADVERTISEMENT

இதனிடையே திருட்டு சம்பவத்தில் தொடா்ந்து ஈடுபட்டு வந்த விஜய், சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஸ்ரீநாத் ஆகியோரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் அடைக்க மாநகர காவல் துணை ஆணையா் எஸ்.பி.லாவண்யா பரிந்துரைத்தாா். பரிந்துரையின் பேரில் மாநகர காவல் ஆணையா் நஜ்மல் ஹோடா, இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT