சேலம் மாவட்டத்தில் விதிகளை மீறிய கடைகளுக்கு ரூ. 55 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
சேலம் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) கிருஷ்ணவேணி தலைமையில் சேலம், ஆத்தூா், மேட்டூா் ஆகிய பகுதிகளில் பல்வேறு ஜவுளிக் கடைகள், இனிப்பு கடைகள், வணிக நிறுவனங்களில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வின்போது சட்டமுறை எடையளவு சட்டம் 2009 மற்றும் பொட்டல பொருள் விதிகள் 2011-ன் படி சட்டம் மற்றும் விதிகள் முறையாகக் கடைப்பிடிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும், புகாரின் அடிப்படையிலும் சேலம், ஆத்தூா், மேட்டூா் ஆகிய பகுதிகளில் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.
85 கடைகள், வணிக நிறுவனங்களில் விதிமுறைகளை மீறி விற்பனை செய்யப்படும் பொருள்கள் கண்டறியப்பட்டு ரூ. 55 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.