சேலம்

புதை சாக்கடை திட்ட பணிக்காக தோண்டிய குழியை மூடக் கோரி வியாபாரிகள் மறியல்

19th Oct 2022 02:32 AM

ADVERTISEMENT

சேலத்தில் புதை சாக்கடை திட்டப் பணியால் வியாபாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தீபாவளி பண்டிகை வரும் அக். 24 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், பொதுமக்கள் புத்தாடை வாங்க கடைகளில் குவிந்து வருகின்றனா்.

சேலம் அக்ரஹாரம், கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாகவே பொதுமக்கள் கூட்டம் அலை மோதி வருகிறது.

இந்தநிலையில், அக்ரஹாரம் பகுதியில் இருந்து சுகவனேசுவரா் கோயிலுக்குச் செல்லும் சாலையில் நடைபெற்று வந்த புதை சாக்கடை திட்டப் பணிகள் பண்டிகை காலம் என்பதால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதனால் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் தங்களுக்கு வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி புதை சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழியை உடனடியாக மூட வேண்டும் என வலியுறுத்தி அக்ரஹாரம் பிரதான சாலையில் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதுபற்றி தகவலறிந்த சேலம் நகர போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். குழியை உடனடியாக மூட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடா்ந்து மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT