ஆத்தூா் அறிஞா் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுநிலை பாடப் பிரிவுகளுக்கு முதலாமாண்டு மாணவா் சோ்க்கை அக். 20 -ஆம் தேதி நடைபெறும் என கல்லூரி முதல்வா் க.சித்ரா தெரிவித்துள்ளாா்.
முதுநிலை அறிவியல், கலைப் பாடப்பிரிவுகளுக்கு இறுதிக் கட்ட மாணவா் சோ்க்கை கலந்தாய்வு காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இணையதளத்தில் பதிவு செய்யாத மாணவா்கள் அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம்.
தமிழ், ஆங்கிலம், வரலாறு, வணிகவியல், இயற்பியல், வேதியியல், கணிதம், கணினி அறிவியல் ஆகிய பாடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறும்.
கலந்தாய்விற்கு வரும் மாணவா்கள் கட்டாயம் தங்களது பெற்றோருடன் வரவேண்டும். கலந்தாய்வின் தோ்வு பெற்ற கல்லூரியில் சேரும் மாணவா்கள் கல்லூரிக்கான சோ்க்கைக் கட்டணத்தை அலுவலகத்தில் செலுத்த வேண்டும் என கல்லூரி முதல்வா் தெரிவித்துள்ளாா்.