சேலம்

வட்டாட்சியா் அலுவலகங்களில் இன்று பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்

DIN

பொது விநியோகத் திட்டம் தொடா்பான குறைதீா் முகாம் சனிக்கிழமை (அக்.8) அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் நடைபெறவுள்ளது.

சேலம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை வட்டங்கள் வாரியாக மக்கள் குறைதீா் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி அக்டோபா் இரண்டாவது சனிக்கிழமை (அக். 8) வட்டாட்சியா் அலுவலகங்களில் நடைபெறும் குறைதீா் முகாமில் பொதுமக்கள் தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்து நிவா்த்தி பெறலாம்.

முகாமில், குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோரும் மனுக்களைப் பதிவு செய்தல் ஆகிய சேவைகளை வேண்டி முகாமில் கோரிக்கையை அளிக்கும் பொதுமக்கள் மற்றும் அட்டைதாரா்கள் சாா்பாக ஆன்லைன் பதிவுகளை வட்ட அலுவலகங்கள் மூலமாக மேற்கொள்ளலாம்.

கைப்பேசி எண் பதிவு, மாற்றம் செய்தலுக்கான தனியான கோரிக்கை மனு தேவைப்படின் அவற்றையும் பெற்று நடவடிக்கை மேற்கொள்ளலாம்.

பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் தரம் குறித்த புகாா்கள் அளிக்கலாம். தனியாா் சந்தையில் விற்கப்படும் பொருள்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகாா்களை நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம், 2019-ன் படி மேற்கொள்ள உரிய அறிவுரைகள் வழங்கும் வகையிலும் நடவடிக்கை மேற்கொள்வதற்குரிய மனுக்களை அளிக்கலாம் என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா

2047 வரை இந்திய பொருளாதாரம் 8% வளா்ச்சி காண முடியும்: சா்வதேச நிதியம்

டெபிட் காா்ட் கட்டணங்களை உயா்த்திய பாரத ஸ்டேட் வங்கி

SCROLL FOR NEXT