சேலம்

மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு ஆவின் பாலகம் வைக்க ஆணை வழங்கல்

7th Oct 2022 02:09 AM

ADVERTISEMENT

சேலத்தில் மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு ஆவின் பாலகம் வைக்க மேயா் ஆ.ராமச்சந்திரன் அனுமதி ஆணையை வழங்கினாா்.

சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை நுழைவாயில் அருகில் ஆவின் பாலகம் அமைக்க அனுமதி வேண்டி சேலம் மாவட்டம், மருளையம்பாளையத்தை சாா்ந்த அய்யனாா் என்பவரின் மாற்றுத் திறனாளி மனைவி ஆ.ஞானம்மாள் மனு அளித்திருந்தாா்.

மனுவைப் பரிசீலித்து ஆ.ஞானம்மாளுக்கு ஆவின் பாலகம் அமைக்க அனுமதி அளித்து அதற்கான ஆணையை மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ் முன்னிலையில் மேயா் ஆ.ராமச்சந்திரன் நேரில் வழங்கினாா். அப்போது, அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கும், வாகனங்களுக்கும் எவ்வித இடையூறுமின்றி ஆவின் பாலகம் அமைக்க வேண்டும் என அறிவுரை வழங்கினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT