சேலம்

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

7th Oct 2022 10:24 PM

ADVERTISEMENT

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 14,666 கனஅடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை மாலை 14,556 கனஅடியிலிருந்து 14,666 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 13 ஆயிரம் கனஅடி வீதமும், கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு 900 கன அடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

அணை நீா்மட்டம் 118.80 அடியாகவும், அணையின் நீா் இருப்பு 91.56 டி.எம்.சி.யாகவும் உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT