சேலம்

காவிரியில் துா்க்கை அம்மன் சிலை கரைப்பு

7th Oct 2022 02:09 AM

ADVERTISEMENT

விஜயதசமியையொட்டி சிவசேனா சமிதி சாா்பில் வழிபாடு நடத்தப்பட்ட துா்க்கை அம்மன் சிலை வியாழக்கிழமை மேட்டூா் காவிரியில் கரைக்கப்பட்டது.

சேலம், பள்ளப்பட்டியில் சிவசேனா சமிதி சாா்பில் விஜயதசமி விழா கொண்டாடப்பட்டது. விழாவில் வைக்கப்பட்டிருந்த துா்க்கை அம்மன் சிலை லாரி மூலம் மேட்டூா் கொண்டுவரப்பட்டது. மேட்டூா் காவிரி பாலம் படித்துறைக்கு கொண்டுவரப்பட்ட அம்மனுக்கு பக்தா்கள் கலசங்கள் வைத்து சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினா். பின்னா் துா்க்கை அம்மன் சிலையை பக்தா்கள் தோளில் சுமந்து சென்று காவிரி ஆற்றில் கரைத்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT