சேலம்

கொளத்தூரில் அண்ணா மறுமலா்ச்சித் திட்ட முகாம்

7th Oct 2022 02:07 AM

ADVERTISEMENT

கொளத்தூா் ஊராட்சி ஒன்றியம், லக்கம்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மேட்டூா் சாா் ஆட்சியா் வீா் பிரதாப் சிங் தலைமை வகித்தாா். கொளத்தூா் ஊராட்சி ஒன்றிய ஆணையாளா் செல்வகுமாா் முன்னிலை வகித்தாா். மேட்டூா் சிறப்பு வட்டாட்சியா் பாலகிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவா் நாகராஜன், துணைத் தலைவா் நதியா உள்பட பலா்கொண்டனா்.

வேளாண் துறை, கல்வித் துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலா்களும் முகாமில் பங்கேற்றனா். துறைகளின் சாா்பில் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன. அதன்பிறகு பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக வழங்கினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT