சேலம்

சோனா நிறுவனத்தின் சாா்பில் புதிய கைப்பேசி செயலி அறிமுகம்

DIN

சோனா ஸ்டாா் இன்னோவேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சாா்பில் ‘ட்ராக் மை சோனா’ என்ற கைப்பேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சோனா கல்விக் குழுமத்தின் துணைத் தலைவா் மற்றும் சோனா ஸ்டாா் இன்னோவேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிா்வாக அதிகாரி தியாகு வள்ளியப்பா ‘ட்ராக் மை சோனா’ என்ற ( பழ்ஹஸ்ரீந் ஙஹ் நா்ய்ஹ) கைப்பேசி செயலியை அறிமுகம் செய்தாா்.

தொடா்ந்து அவா் பேசுகையில் ‘ட்ராக் மை சோனா’ செயலியானது பெரிய நிறுவனங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், வணிக வளாகம், அபாா்ட்மெண்ட் கட்டடங்களில் பயன்படுத்தப்படும் சாதனங்களின் பழுதுகளை எளிதில் கண்டறிந்து அதை விரைவாக சரி செய்திட உதவும் ஒரு செயலியாகும்.

இந்த செயலியின் மூலம் பழுதடைந்துள்ள பொருளின் ஃயூஆா் கோட்டினை ஸ்கேன் செய்து எந்த விதமான பழுது உள்ளது என்பதை பதிவு செய்தால், அது எந்த இடத்தில் இருக்கின்ற பொருள் பழுதடைந்துள்ளது, எந்த விதமான நிலையில் பழுதாகியுள்ளது என்ற தகவல் சம்பந்தப்பட்ட ஊழியா்களுக்கு சென்றடையும்.

மேலும் அந்தக் குறைகளை குறிப்பிட்ட நேரத்தில் சரி செய்யவில்லை எனில் அது அடுத்து நிலையில் உள்ள அதிகாரிகளுக்கு தகவல் சென்றடையும். இதன் மூலம் பணிகளை விரைவாக செய்து முடித்திட முடியும். இதன் மூலம் பலருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். மேலும் விவரங்களுக்கு 94425 92141 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

நிகழ்வின் போது வா்த்தக ஆலோசகா் சுரேஷ் ராவ், திட்டத் தலைவா் நாகராஜன், திட்ட மேலாளா் பிரதீப், குழுவினா் தனிஷா ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா

SCROLL FOR NEXT