சேலம்

விஜயதசமி: குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி

6th Oct 2022 12:59 AM

ADVERTISEMENT

விஜயதசமியை முன்னிட்டு சேலத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில் குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

விஜயதசமியை முன்னிட்டு சேலம், சாஸ்தா நகா் ஐயப்பன் கோயிலில் புதன்கிழமை காலை நெய் அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து எழுத்தறிவிக்கும் வித்யாரம்பம் பூஜை நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோா் தங்களது குழந்தைகளை அழைத்து வந்து வித்யாரம்பம் பூஜையில் பங்கேற்றனா்.

அா்ச்சகா்கள் சிறப்பு பூஜை செய்து குழந்தைகளின் நாவில் ‘அ’ என எழுதினா். அதைத்தொடா்ந்து பெற்றோா், குழந்தைகளின் கையைப் பிடித்து அரிசியில் அ என எழுத வைத்தனா்.

சேலத்தில் உள்ள ஐயப்பன், கிருஷ்ணா் கோயில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் திரளான பெற்றோா் தங்களது குழந்தையுடன் கலந்து கொண்டனா். விஜயதசமியை முன்னிட்டு பெற்றோா்கள் தங்களது குழந்தைகளை மழலையா் பள்ளிகளிலும், தொடக்கப் பள்ளிகளிலும் சோ்த்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT