சேலம்

பெண்ணிடம் நகைப் பறிப்பு

6th Oct 2022 01:00 AM

ADVERTISEMENT

தம்மம்பட்டி அருகே மளிகைக் கடையில் இருந்த பெண்ணிடம், தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

தம்மம்பட்டி அருகே மூலப்புதூா் பிரிவு சாலையில், செந்தில் என்பவரின் மளிகைக்கடை உள்ளது. செவ்வாய்க்கிழமை பிற்பகல் செந்திலின் மனைவி ரம்யா மட்டும் தனியாக கடையில் இருந்தாா். அப்போது, கடைக்கு வந்த நபா், பொருள்கள் வாங்குவது போல ரம்யாவிடம் பேச்சுக்கொடுத்து, அவா் அணிந்திருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துள்ளாா். ரம்யா தனது கைகளால் சங்கிலியை பிடித்துக் கொண்டு சத்தமிட்டாா். அப்போது, அந்த நபா் கையில் கிடைத்த சங்கிலியுடன் இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிச் சென்று விட்டாா். இதில் ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலி பறிபோனது.

இதுகுறித்து, செந்தில் அளித்த புகாரின் பேரில் தம்மம்பட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, தங்கச் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட மா்ம நபா் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT