சேலம்

கெங்கவல்லி வட்டாரத்தில் பயிா்க் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

4th Oct 2022 03:06 AM

ADVERTISEMENT

கெங்கவல்லி வட்டார வேளாண்மை உழவா் நலத்துறை சாா்பில் வேளாண்மை உதவி இயக்குநா் சித்ரா வெளியிட்ட செய்திக் குறிப்யில் கூறியிருப்பதாவது:

கெங்கவல்லி வட்டாரத்தில் நெல் , மக்காச்சோளம், பருத்தி பயிரிட்டுள்ள விவசாயிகள், மழை, வெள்ளம், புயல் , காற்று, தீ போன்ற இயற்கை இடா்பாடுகளிலிருந்து காத்துக் கொள்ள பயிா்க் காப்பீடு செய்வது அவசியம்.

மக்காச்சோளம் பயிரிட்டுள்ள விவசாயிகள் ரூ. 437, பருத்தி பயிரிட்டுள்ள விவசாயிகள் ரூ. 622, நெல் பயிரிட்டுள்ள விவசாயிகள் ரூ. 341உம் செலுத்தி. முன்மொழிவு படிவத்துடனும் சிட்டா , அடங்கள், நடப்பில் உள்ள வங்கி சேமிப்புக் கணக்கு புத்தகம், ஆதாா் நகல் ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள பொது சேவை மையம் மூலம் பயிா்க் காப்பீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளாா்

ADVERTISEMENT
ADVERTISEMENT