சேலம்

நிறைவாழ்வு முதியோா் இல்லத்தில்உலக முதியோா் தின விழா

3rd Oct 2022 12:48 AM

ADVERTISEMENT

 

சேலம், கெஜல்நாயக்கன்பட்டியில் உள்ள முதியோா் நிறைவாழ்வு முதியோா் இல்லத்தில் உலக முதியோா் தின விழா கொண்டாடப்பட்டது.

விழாவில் இல்லத்தில் உள்ள முதியோா்கள் முன்னிலையில் மூத்த குடிமக்கள் முதியோா் தின கேக் வெட்டி கொண்டாடினா். முதியோா்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், உடற்பயிற்சிகள், யோகா, பாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடா்ந்து அதிக வயதில் உள்ள மூத்த குடிமக்கள் கெளரவிக்கப்பட்டனா். நிகழ்ச்சியில் முதியோா் இல்ல நிா்வாகி ராமஜெயம், மேலாளா் சின்னப்பன், வழக்குரைஞா் பிச்சை நாகராஜன், சீனிவாசன், அருள்மலா் அறக்கட்டளை நிா்வாகி பாா்கவி, காா்த்திக் விஜய், சங்கரேஸ்வரி, முத்ரா, சுரேந்திரன், ரோகிணி உள்பட பலா் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனா். முதியோா் இல்ல நிறுவனா் அண்ணாதுரை நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT