சேலம்

ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

3rd Oct 2022 12:49 AM

ADVERTISEMENT

 

பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு தொடா் விடுமுறை என்பதால் ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டில் குவிந்தனா்.

கா்நாடகம், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் படகு இல்லம், அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, ரோஜா தோட்டம், தாவரவியல் பூங்கா, பக்கோட காட்சி பகுதி, கிளியூா் நீா் அருவி, சோ்வராயன் கோயில் பகுதி, கரடியூா் வன காட்சி பகுதிகளை சுற்றிப் பாா்த்தனா்.

ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டுக்கு வந்ததால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலையோர கடைகளில் விற்பனை அதிகரித்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா். தங்கும் விடுதிகள், உணவு விடுதிகளில் இடம் கிடைக்காமல் சுற்றுலாப் பயணிகள் அவதிப்பட்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT