சேலம்

குழந்தைகளுக்கு ஆலோசனை முகாம்

3rd Oct 2022 12:49 AM

ADVERTISEMENT

 

தொன்போஸ்கோ அன்பு இல்லம் மற்றும் மைல்ஸ்டோன் டெவலப்மென்ட் மையம் இணைந்து அன்பு இல்ல குழந்தைகளுக்கு உள நலம், உடல்நலம் சிறப்பு மருத்துவ முகாமை நடத்தியது.

தொன் போஸ்கோ அன்பு இல்ல வளாகத்தில் நடைபெற்ற குழந்தைகளுக்கான ஆலோசனை முகாமில் அன்பு இல்ல இயக்குநா் எம்.கஸ்மீா் ராஜ் தலைமை வகித்தாா். குழந்தைகள் நல மருத்துவா் ப்ரியதா்ஷினியின் ஆலோசனைக் குழுவுடன் இணைந்து மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்த முகாமிற்கு தொன் போஸ்கோ அன்பு இல்ல ஒருங்கிணைப்பாளா் சேவியா், சண்முகா மருத்துவமனை முதன்மைச் செயல் அலுவலா் அந்துவான் சாம்ராஜ் ஆகியோா் ஏற்பாடு செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT