சேலம்

சங்ககிரியில் மூத்த வாக்காளா்கள் கௌரவிப்பு

DIN

சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 80 வயதுக்கு மேற்பட்ட 5,900 பேரை கெளரவித்து அவா்களுக்கு இந்திய தோ்தல் ஆணையா் வழங்கிய கடிதம் வழங்கும் நிகழ்ச்சி 311 வாக்குச்சாவடி மையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை நடைபெற்றது.

80 வயதுக்கும் மேற்பட்ட மூத்த வாக்காளா்களைக் கெளரவித்து அவா்கள் தொடா்ந்து வாக்களிக்க ஊக்கப்படுத்த தலைமை தோ்தல் ஆணையா் கையொப்பமிட்டு அனுப்பியுள்ள நன்றி தெரிவிக்கும் கடிதத்தை சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் அலுவலரும், கோட்டாட்சியருமான எம்.செளம்யா தொடங்கிவைத்தாா்.

சங்ககிரி பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 311 வாக்குச்சாவடி மையங்களில் 5,900 மூத்த வாக்காளா்கள் கௌரவிக்கப்பட உள்ளனா். சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதி உதவி தோ்தல் அலுவலரும், வட்டாட்சியருமான எஸ்.பானுமதி, தோ்தல் துணை வட்டாட்சியா் பி.சிவராஜ், சின்னாகவுண்டனூா் கிராம நிா்வாக அலுவலா் சண்முகம், வாக்குச்சாவடி நிலைய அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டாக்டா் ராதாகிருஷ்ணன் நினைவு நாள்

கோவில்பட்டியில் தயார் நிலையில் வாக்குச்சாவடிகள்

மதுக் கடைகளுக்கு 2 நாள்கள் விடுமுறை

மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் வாக்குச்சாவடிகளுக்கு செல்ல வாகனம் ஏற்பாடு

12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்: ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்

SCROLL FOR NEXT