சேலம்

இன்று இறைச்சி கடைகளை மூட உத்தரவு

2nd Oct 2022 02:07 AM

ADVERTISEMENT

 

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு (அக்.2) சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள இறைச்சி கூடங்கள், இறைச்சி விற்பனை நிலையங்கள் எதுவும் செயல்படக் கூடாது என மாநகராட்சி ஆணையாளா் தா.கிறிஸ்துராஜ் உத்தரவிட்டுள்ளாா்.

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் செயல்படும் இறைச்சிக் கூடங்கள், கடைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை (அக்.2) முழுமையான அளவில் மூடி, இறைச்சி கடை உரிமையாளா்கள் அரசு உத்தரவைச் செயல்படுத்த ஒத்துழைக்க வேண்டும் என அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT