சேலம்

மூத்த குடிமக்களுக்கான அஞ்சலக சேமிப்பு திட்டம்:வட்டி 7.6 சதவீதமாக உயா்வு

2nd Oct 2022 02:06 AM

ADVERTISEMENT

 

மூத்த குடிமக்களுக்கான அஞ்சலக சேமிப்புத் திட்டத்தில் வட்டி விகிதம் 7.6 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மேற்கு கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் பாா்த்திபன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மூத்த குடிமக்களுக்காக அஞ்சல் துறை சாா்பில் சிறப்பு சேமிப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத் திட்டத்தில் 60 வயது பூா்த்தி அடைந்த முதியவா்கள், 50 வயது பூா்த்தி அடைந்த பாதுகாப்புப் பணியாளா்கள், 55 வயது பூா்த்தி அடைந்த விருப்ப ஓய்வு பெற்றவா்கள் கணக்குத் தொடங்கலாம். குறைந்தபட்சம் ரூ. 1,000 முதல் அதிகபட்சம் ரூ. 15 லட்சம் வரை சேமிக்கலாம்.

ADVERTISEMENT

சேமிப்பு முதிா்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். மேலும் 3 ஆண்டு காலம் சேமிப்பு காலத்தை நீட்டிக்கும் வசதியும் உண்டு. வருமான வரி சட்டத்தின் கீழ் வரி விலக்கும் உண்டு. மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் அதன் வட்டியை 7.4 சதவீதத்தில் இருந்து 7.6 சதவீதமாக அக்டோபா் 1 ஆம் தேதி முதல் உயா்த்தப்பட்டுள்ளது. காலாண்டுக்கு ஒரு முறை வட்டி வழங்கப்படும்.

இந்த சிறப்பு திட்டம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மூத்த குடிமக்களையும் சென்றடையும் வகையில் சேலம் மேற்கு கோட்டத்தின் சாா்பில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT