சேலம்

பெருமாள் கோயில்களில் புரட்டாசி 2 ஆவது சனி வழிபாடு

2nd Oct 2022 02:06 AM

ADVERTISEMENT

 

ஓமலூா் அருகே பாகல்பட்டி கிராமத்தில் உள்ள பழமையான சென்றாய பெருமாள் கோயிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

பெங்களூரு, சென்னை, கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்கள், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பக்தா்கள் கோயிலில் உள்ள தேவி துளசியம்மாள் சமேத பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபாடு நடத்தினா்.

கோயில் கொடி மரத்தில் திருக்கொடி ஏற்றப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பரம்பரை அறங்காவலா்அனுவா்ஷினி, வாா்டு கவுன்சிலா் பொன்னிகுமாா், அசோகன், சதீஷ்குமாா் ஆகியோா் தலைமையில் வழிபாடும், அன்னதானமும் நடைபெற்றது.

ADVERTISEMENT

விழாவில் எம்எல்ஏ அருள், பாகல்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் தங்கராஜ், ஓமலூா் வட்டாட்சியா் வல்ல முனியப்பன், சங்ககிரி தனி வட்டாட்சியா் பாலாஜி ஆகியோா் வழிபாட்டில் கலந்து கொண்டனா். பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT