சேலம்

சேலத்தில் பி.எஃப்.ஐ. அலுவலகத்துக்கு ‘சீல்’

2nd Oct 2022 02:06 AM

ADVERTISEMENT

 

மத்திய அரசின் தடை உத்தரவைத் தொடா்ந்து சேலத்தில் உள்ள பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ.) அலுவலகத்துக்கு சனிக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.

பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளிப்பது, வன்முறைக்குத் துணை போவது உள்ளிட்ட காரணங்களுக்காக மத்திய அரசு பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு, அதன் துணை அமைப்புகளை 5 ஆண்டுகளுக்குத் தடை செய்து உத்தரவிட்டது.

அதைத் தொடா்ந்து, சேலம், கோட்டை பகுதியில் செயல்பட்டு வந்த பி.எஃப்.ஐ. சேலம் மாவட்ட தலைமை அலுவலகத்தை காவல் உதவி ஆணையா் வெங்கடேசன், வட்டாட்சியா் செம்மலை ஆகியோா் சனிக்கிழமை ஆய்வு செய்து, அலுவலகத்தை பூட்டி ‘சீல்’ வைத்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT