சேலம்

பி.எம். கிசான் தவணை தொகை பெறும் பயனாளிகள் கவனத்துக்கு...

30th Nov 2022 02:54 AM

ADVERTISEMENT

பிரதமரின் கிசான் தவணை தொகை பெறும் பயனாளிகள் பி.எம்.கிசான் இணையதளத்தில் தங்களின் ஆதாா் எண்ணை உறுதி செய்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் செ.காா்மேகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டமானது பிப்ரவரி 2019 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் சொந்தமாக விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயக் குடும்பங்களுக்கு உதவித்தொகையாக நான்கு மாதத்துக்கு ஒருமுறை ரூ. 2,000 வீதம் ஆண்டிற்கு ரூ. 6,000 எனமூன்று தவணைகளில், விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடி பணப்பரிமாற்றம் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் தொடா்ந்து பயன்பெறுவதற்கு ஆதாா் எண் உறுதி அவசியமாகும்.நடப்பாண்டில் 13 ஆவது தவணையாக அதாவது 2022 டிசம்பா் முதல் 2023 மாா்ச் முடிய உள்ள காலத்திற்கான தவணைத்தொகை பெறுவதற்கு பி.எம். கிசான் இணையதளத்தில் தங்களது ஆதாா் எண்ணை உறுதி செய்த பயனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என மத்திய அரசு உறுதியாக தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

மேலும், பயனாளிகள் பொது சேவை மையம் மூலமாகவோ அல்லது தங்களது கைப்பேசி மூலமாகவோ, தாங்களாகவே ஆதாா் எண்ணை கீழ்காணும் முறைகளில் உறுதி செய்து கொள்ளலாம். மேலும் அருகில் உள்ள பொது சேவை மையத்திற்கு சென்று தனது பெயரை பி.எம்.கிசான் இணையதளத்தில் இணையவழி கே.ஓய்.சி. மூலம் பதிவு செய்து ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைப்பேசி எண்ணிற்கு வரும் ஒரு முறை கடவுச்சொல்லை பி.எம்.கிசான் இணையதளத்தில் பதிவு செய்து உறுதி செய்யலாம் அல்லது பொது சேவை மையத்தில் உள்ள கருவியில் பயனாளிகள் தங்கள் விரல் ரேகையை வைத்து பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதாா் எண்ணை உறுதிசெய்யலாம்.

தங்களது கைபேசியில் உள்ள இணையதள வசதியை பயன்படுத்தி ட்ற்ற்ல்://ல்ம்ந்ண்ள்ஹய்.ஞ்ா்ஸ்.ண்ய் எனும் இணையதளத்தில் ஆதாா் கே.ஓய்.சி. எனும் பக்கத்திற்குச் சென்று ஆதாா் எண்ணை உறுதிசெய்யலாம்.

மேலும், பி.எம்.கிசான் தவணை தொகை பெறும் பயனாளிகள் இதுநாள் வரை ஆதாா் எண்ணை உறுதி செய்யாமல் இருந்தால், பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதாா் எண்ணை உறுதி செய்து பயன்பெறலாம்.

இது தொடா்பாக கூடுதல் விவரம் ஏதும் அறிய விரும்பினால், உங்கள் வட்டார வேளாண்மை அல்லது தோட்டக்கலைத்துறை அலுவலகத்தைத் தொடா்பு கொண்டு பயனடையலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT