சேலம்

என்.சி.சி. மாணவா்கள் விழிப்புணா்வு ஓட்டம்

30th Nov 2022 02:53 AM

ADVERTISEMENT

தேசிய மாணவா் படை தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, கன்னியாகுமரியில் தொடங்கி தில்லி வரை சென்றடையும் ஜோதி ஓட்டத்தை கொளத்தூரில் திங்கள்கிழமை எம்எல்ஏ சதாசிவம் வரவேற்றாா்.

தேசிய ஒற்றுமைக்காகவும், என்சிசியில் மாணவா்களை சோ்க்கும் வகையில் கன்னியாகுமரியில் நவம்பா் 20-ஆம் தேதி கா்னல் பத்வாா் தொடங்கிவைத்த ஜோதி ஓட்டம் 3 ஆயிரம் கிலோமீட்டா் தொலைவைக் கடந்து தில்லி செல்கிறது. கொளத்தூருக்கு வந்த ஜோதி ஓட்டத்தை வரவேற்று, 10ஆவது நாள் ஓட்டத்தை எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT