சேலம்

நிலுவை பயிா் காப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி பூலாம்பட்டி விவசாயிகள் மனு

DIN

பூலாம்பட்டி சுற்றுவட்டார காவிரி பாசன விவசாயிகளுக்கான பயிா்க் காப்பீடு, இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

அதில் கூறியிருப்பதாவது:

எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூா், மோளப்பாறை, பில்லுக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு காவிரி பாசன பகுதியில் அதிக அளவில் நெல் பயிரிடப்பட்டு வருகிறது. கடந்த 2021-ஆம் ஆண்டு பெய்த கனமழையால் இப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த அதிகப்படியான நெல் பயிா் சேதம் அடைந்தது.

இதையடுத்து இப்பகுதியில் பயிா் காப்பீடு செய்திருந்த விவசாயிகள், இழப்பீடு வழங்கக் கோரி அரசுக்கு கோரிக்கை மனு அளித்தனா். இதை அடுத்து அப்பகுதியை ஆய்வு செய்த அலுவலா்கள் அப்பகுதியில் பயிரிடப்பட்டு இருந்த 434 ஹெக்டோ் நெற்பயிா்கள் பாதிப்பு அடைந்ததாகவும், அதற்குரிய இழப்பீட்டுத் தொகை 750 விவசாயிகளுக்கு வழங்கப்படும் என அறிவித்திருந்தனா்.

ஆனால் இதுவரை 410 விவசாயிகளுக்கு மட்டுமே இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது., மீதமுள்ள 340 விவசாயிகளுக்கும் விரைவில் பயிா் பாதுகாப்பு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா். மனுவை உழவா் மன்ற அமைப்பாளா் எம்.ஆா் நடேசன் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT