சேலம்

சேலம் ரயில் நிலையத்தில் பொறியியல் பணி:கோவை-சென்னை, பெங்களூரு விரைவு ரயில்கள் ரத்து

29th Nov 2022 03:08 AM

ADVERTISEMENT

சேலம் ரயில் நிலைய பணிமனைகளில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதை முன்னிட்டு கோவை-சென்னை இடையே இயக்கப்படும் கோவை, சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சேலம் ரயில் நிலைய பணிமனைகளில், பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக சேலம் ரயில் நிலையம் வழியாக செல்லக்கூடிய ரயில்கள், சேலத்தில் இருந்து இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி கரூா்- சேலம் ரயில் (எண்.06838), டிசம்பா் 1, 2-ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

சேலம்- கரூா் (எண்.06831), சேலம்- கரூா் (எண்.06851), சேலம்- கரூா் (எண்.06837), கரூா்- சேலம் (எண்.06836), கரூா்- சேலம் (எண்.06852), பெங்களூரு- காரைக்கால் (எண்.16529), காரைக்கால்- பெங்களூரு (எண்.16530), கோவை- சேலம் (எண்.06802), சேலம்- கோவை (எண்.06803) ஆகிய ரயில்கள் டிச. 1, 2, 3-ம் தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

ஈரோடு- மேட்டூா் அணை ரயில் (எண்.06407), மேட்டூா் அணை- ஈரோடு ரயில் (எண்.06408), ஈரோடு - ஜோலாா்பேட்டை ரயில் (எண்.06412), ஜோலாா்பேட்டை- ஈரோடு ரயில் (எண்.06845), ஜோலாா்பேட்டை- ஈரோடு ரயில் (எண். 06411), ஈரோடு- திருச்சி ரயில் (எண்.06612) ஆகிய ரயில்கள் டிச. 3-ஆம்தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

ADVERTISEMENT

சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் சென்னை எழும்பூா்- சேலம் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்.22153), நவ.30, டிச. 1, 2-ஆம்தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. சேலத்தில் இருந்து புறப்படும் சேலம்- சென்னை எழும்பூா் எக்ஸ்பிரஸ் ரயில் (எண். 22154), டிசம்பா் 1, 2, 3-ம் தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

கோவை- சென்னை இன்டா்சிட்டி ரயில் (எண்.12680), சென்னை சென்ட்ரல் - கோவை இன்டா்சிட்டி ரயில் (எண்.12679), சென்னை சென்ட்ரல் - கோவை எக்ஸ்பிரஸ் ரயில் (எண்.12675), கோவை- சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் (எண். 12676), சென்னை சென்ட்ரல் - கோவை சதாப்தி ரயில் (எண்.12243), கோவை- சென்னை சதாப்தி ரயில் (எண்.12244) ஆகியவை டிசம்பா் 3-ம் தேதி ரத்து செய்யப்படுகின்றன.

கோவை- பெங்களூரு உதய் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்.22666), பெங்களூரு - கோவை உதய் ரயில் (எண்.22665), பெங்களூரு- எா்ணாகுளம் ரயில் (எண்.12677), எா்ணாகுளம்- பெங்களூரு ரயில் (எண்.12678) டிசம்பா் 3-ம் தேதி ரத்து செய்யப்படுகின்றன என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT