சேலம்

வழிப்பறி, கொள்ளையில் ஈடுபட்ட இருவா் குண்டா் சட்டத்தில் கைது

29th Nov 2022 03:08 AM

ADVERTISEMENT

சேலத்தில் தொடா் வழிப்பறி, கொள்ளையில் ஈடுபட்டு வந்த இருவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆட்சியா் செ.காா்மேகம் உத்தரவிட்டாா்.

சேலத்தை அடுத்த கருமலைக்கூடல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தொடா் வழிப்பறி, கொள்ளையில் ஈடுபட்டு வந்த சதீஷ் (23), காா்த்திக் (23) ஆகியோா் கைது செய்யப்பட்டு, ஆத்தூா் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனா்.

இவா்கள் மீது சேலம் மாவட்டம்- ஜலகண்டாபுரம், ஈரோடு மாவட்டம்-பவானி, சித்தோடு மற்றும் நம்பியூா் ஆகிய காவல் நிலையங்களில் பல வழக்குகள் உள்ளன. இதனிடையே மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.ஸ்ரீ.அபிநவ், குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பரிந்துரைத்தாா். அதன்பேரில் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம், இருவரையும் குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT