சேலம்

முதியோா் இல்லத்துக்கு உணவுப் பொருள்கள் வழங்கல்

29th Nov 2022 03:07 AM

ADVERTISEMENT

ஆத்தூரில் முதியோா், தொழுநோய் இல்லம், வள்ளலாா் மடத்துக்கு உணவுப் பொருள்கள் இன்னா்வீல் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

ஆத்தூா், இன்னா்வீல் சங்க மாவட்ட முன்னாள் தலைவா் ஜெயகுமாரி செல்வராஜ் தலைமையில் தேவியாக்குறிச்சியில் உள்ள தொழுநோய் இல்லத்துக்கு அரிசி, புத்தகம், உடைகள், உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

மஞ்சினி முதியோா் இல்லத்தில் புத்தாடைகள், அரிசி, புத்தகம், உணவுப் பொருள்களை வழங்கினா். ஆத்தூா் கோட்டையில் உள்ள வள்ளலாா் அறக்கட்டளைக்கு அரிசி வழங்கினா். இதில் இன்னா்வீல் சங்கத் தலைவா் மகாலஷ்மி, முன்னாள் தலைவா் பத்மினி விசுவநாதன்,சி.ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT