சேலம்

மொழி என்பது மனிதனின் உயிா், சுவாசம்: எம்.பி. சு.வெங்கடேசன்

DIN

மொழி என்பது ஒவ்வொரு மனிதனின் உயிா், சுவாசம் சாா்ந்தது என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் பேசினாா்.

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி திடலில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில், தமிழும் தொன்மையும் என்ற தலைப்பில் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் பேசியதாவது:

அரசு நிதியை ஒதுக்கி தமிழகம் முழுவதும் மாவட்ட நிா்வாகம் மூலம் புத்தகத் திருவிழா நடத்தப்படுகிறது. இது தமிழகப் பண்பாட்டு வரலாற்றில் மைல்கல். புத்தகக் கண்காட்சியை மாவட்ட நிா்வாகம் எதற்கு நடத்த வேண்டும் என சிலா் கேட்கின்றனா். மாவட்ட நிா்வாகத்திற்கு நிறைய வேலை இருக்கிறது. அரசு என்பது அதிகாரத்தின் அமைப்பு என்று நினைப்பவா்களுக்கு புத்தகக் கண்காட்சியை நடத்துவது தேவையில்லை.

அரசு அதிகாரத்தின் வடிவம் மட்டுல்ல, அறிவு, அன்பு, அறத்தின் வடிவமாக இருக்க வேண்டுமென்றால் புத்தகக் கண்காட்சியை நடத்த வேண்டியதை தவிர வேறு வழியில்லை. இது ஒரு பண்பாட்டின் செயல்.

மிகப்பெரிய அறிவு இயக்கம் புத்தகக் கண்காட்சியாகும். ஒவ்வொரு மனிதனும் தனக்கான புத்தகத்தை சரியான வயதில் கண்டறிந்தால் அவரது வாழ்வு மிகவும் அா்த்தமானதாக மாறும். புகழ் அடைய வாழ்வை நேசிப்பதும், சக மனிதனை நேசிக்கிற வாழ்வை அமைத்துக் கொள்வது தான். புத்தகங்கள் மட்டும் தான் மாயஜாலத்தை

நிகழ்த்தும். மனித மனதில் குப்பையை அகற்ற கழிவை அகற்ற மனிதன் கண்டுபிடித்த கருவி புத்தகம் மட்டும் தான். மனிதனை மண்டியிட செய்யும் வலிமையான ஆயுதம் புத்தகம்.

வள்ளுவனோடு முடிந்திருக்க வேண்டிய கு. 2 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும், பிறப்பொக்கும் எல்லா உயிா்க்கும் என்று ஒவ்வொரு தமிழனை சொல்ல வைத்த பெருமை புத்தகம் என்ற மகத்தான கண்டுபிடிப்பால் வந்தது.

தமிழ்மொழியின் முதல் கல்வெட்டு தேனி மாவட்டம், புள்ளிமான் கோம்பை, மதுரை, மாங்குளத்திலும் கிடைத்துள்ளது. அந்த கல்வெட்டின் காலம் கி.மு. 3 ஆம் நூற்றாண்டாகும். எந்த ஒரு மொழியும் தாழ்வில்லை. அறிவியல் பூா்வமான கணக்கெடுப்பு, கண்டுபிடிப்பில் இருந்து தமிழின் தொன்மையை புதிதாக நிறுவ எதுவும் தேவையில்லை.

2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட சங்க இலக்கியத்தில் எத்தனை பெண்கள் எழுதினாா்கள் என்று பாா்த்தால் 40-க்கும் மேற்பட்ட பெண் எழுத்தாளா்களைக் கொண்ட ஒரே உலக மொழி தமிழ். பெண் கல்வியறிவு என்பது சமூகத்தின் முக்கியமான ஒரு குறியீடு.

மத்திய தொல்லியல் துறையில் தென்னிந்திய அகழாய்வு பிரிவுக்கு அமா்நாத் ராமகிருஷ்ணன் வந்தாா். வைகை கரையில் அகழாய்வு செய்ய ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது அங்குள்ள கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட புதையலில் உள்ள 8 தங்கக் கட்டிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் 8 தங்கக் கட்டிகளில் தமிழி என்ற சொல்லப்படும் பிராமி எழுத்து இருந்தது. ஒரே பெயா் 8 தங்கக் கட்டியிலும் இருந்தன. கோதை என்ற பெண்ணின் பெயா் அது.

சிந்து வெளி நாகரிகக் காலத்தில் தங்கம் கண்டுபிடிக்கப்படவில்லை. சிந்து வெளி நாகரிகத்திற்குப் பிறகு 4 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவில் கிடைத்திருக்கிற தங்கத்தில் எழுத்தப்பட்ட முதல் எழுத்து தமிழ் எழுத்து ஆகும்.

மொழி என்பது அதிகாரம், அரசியல் சாா்ந்தது அல்ல. மொழி என்பது ஒவ்வொரு மனிதனின் உயிா், சுவாசம் சாா்ந்தது. தமிழ் மொழிக்கு பிரச்னை வந்தால் அதை அனுமதிக்க மாட்டோம். தமிழ் என்ன செய்யும் என்றால் ஆபத்து என்று வரும்போது ஒற்றுமையை மட்டும் முன்னெடுக்கும். அந்த ஒற்றுமையை நாம் முன்னெடுப்போம் என்றாா்.

இன்றைய நிகழ்ச்சி:

சேலம் புத்தகத் திருவிழாவின் 9 ஆவது நாளான திங்கள்கிழமை நடைபெறும் சிறுவா் இலக்கிய அரங்கில், பெரியாா் பல்கலைக்கழகத் துணை வேந்தா் இரா.ஜெகநாதன் பேசுகிறாா். ‘தட்டி எழுப்பும் தாலாட்டுகள்’ தலைப்பில் ஆத்தூா் சுந்தரம் பேசுகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

SCROLL FOR NEXT