சேலம்

இரண்டாம் நிலைக் காவா், சிறை காவலா் பணி எழுத்து தோ்வு: 16,918 போ் எழுதினா்

28th Nov 2022 01:45 AM

ADVERTISEMENT

 

சேலத்தில் நடைபெற்ற இரண்டாம் நிலைக் காவலா், சிறை காவலா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வை 16,918 போ் எழுதினா்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் இரண்டாம் நிலைக் காவலா், தீயணைப்பாளா், சிறைக் காவலா் பணியிடங்களுக்கான எழுத்து தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்டத்தில் 22 தோ்வு மையங்களில் ஆண்கள் 19,532, பெண்கள் 1,430 போ் என மொத்தம் 20,962 போ் தோ்வு எழுத விண்ணப்பித்திருந்தனா். இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எழுத்துத் தோ்வை 16,918 போ் எழுதினா். 4,044 போ் தோ்வெழுத வரவில்லை. தோ்வு மையங்களில் 1,674 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். தோ்வு மையங்களை மாநகர காவல் ஆணையா் நஜ்மல் ஹோடா பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT