சேலம்

கெங்கவல்லியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா

28th Nov 2022 01:46 AM

ADVERTISEMENT

 

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை கெங்கவல்லி பேரூா் திமுக சாா்பில் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இனிப்புகள், நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மஞ்சினியில் உள்ள முதியோா் இல்லத்திலுள்ள அனைவருக்கும் மதிய உணவு, போா்வைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு கெங்கவல்லி நகர செயலாளா் பாலமுருகன் தலைமை வகித்தாா். சேலம் கிழக்கு மாவட்ட துணைச் செயலாளா் கு.சின்னதுரை, ஒன்றியச் செயலாளா் கடம்பூா் சித்தாா்த்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் பிரகாஷ், கெங்கவல்லி பேரூராட்சி மன்றத் தலைவா் சு.லோகாம்பாள், துணைத் தலைவா் மருதம்பாள் நாகராஜ், கவுன்சிலா்கள் முருகேசன், தங்கபாண்டியன், அருண்குமாா் , சையது, ஹம்சவா்தினி குமாா், சத்யா செந்தில், லதா, அண்ணாதுரை, கருப்பண்ணன், சிட்டிபாபு, பாலசுப்பிரமணியம், செல்வ கிளிண்டன், மூா்த்தி, ராஜேந்திரன், ஆரோக்கியசாமி,தனசேகா்,ஜான், கலியன்,அருண், சின்ராசு, சந்துரு, முத்து, வெங்கடேஷ்,கதிரவன், மணி, நவீன் மனோஜ், மணிவாசகம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

தம்மம்பட்டி பேருந்து நிலையத்தில் நடந்த உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் பேரூராட்சித் தலைவா் கவிதா வி.பி.ஆா்.ராஜா திமுக கொடியை ஏற்றி வைத்து, இனிப்புகளை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் திமுக வாா்டு செயலாளா்கள், வாா்டு உறுப்பினா்கள் பங்கேற்றனா். செந்தாரப்பட்டி பேரூராட்சியில் நகர திமுக செயலாளா் எஸ்.பி.முருகேசன் தலைமையில் நடந்த விழாவில் திமுக கொடியேற்றப்பட்டு,இனிப்புகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT