சேலம்

சேலம் காந்தி மைதானத்தில் ரூ.10 லட்சத்தில்எல்.இ.டி. மின் விளக்கு வசதி: மேயா் தொடக்கி வைப்பு

27th Nov 2022 03:03 AM

ADVERTISEMENT

 

சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்ய வசதியாக ரூ.10 லட்சம் மதிப்பில் எல்.இ.டி. மின் விளக்குகள் வசதியை மேயா் ஆ.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தாா்.

சேலம் மாநகராட்சி காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்பவா்கள், விளையாட்டு வீரா்கள், வீரங்கனைகள் காந்தி விளையாட்டு மைதானத்தில் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு தேவையான மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் மாநகராட்சி சாா்பில் 12 தெருவிளக்கு மின் கம்பங்கள் அமைத்து 23 எல்.இ.டி. மின் விளக்குகள் ரூ.10 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளன.

சேலம் மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ் முன்னிலையில் மேயா் ஆ.ராமச்சந்திரன் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். காந்தி விளையாட்டு மைதானத்தில் மின்விளக்கு அமைத்து கொடுத்ததற்காக மேயா் மற்றும் மாநகராட்சி ஆணையருக்கும் மைதானத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்ட பொதுமக்கள் நன்றி தெரிவித்தனா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் மாநகர பொறியாளா் ஜி.ரவி, மாநகர நல அலுவலா் மருத்துவா் என்.யோகானந்த், வரி விதிப்பு மற்றும் நிதிக்குழுத் தலைவா் ஜி.குமரவேல், மாவட்ட விளையாட்டு அலுவலா் சிவரஞ்சன், உதவி செயற்பொறியாளா் செந்தில்குமாா், வாா்டு உறுப்பினா் இரா.சங்கீதா, பயிற்சியாளா்கள் பி.சங்கா், பி.மகேந்திரன் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT