சேலம்

சேலம் பருப்பு கிடங்கில் வருமான வரித் துறையினா் சோதனை

27th Nov 2022 03:04 AM

ADVERTISEMENT

 

சேலத்தில் பருப்பு கிடங்கில் வருமான வரித் துறையினா் சோதனை மேற்கொண்டனா்.

தமிழகம் முழுவதும் அரசு நியாய விலைக் கடைகளுக்கு ஐந்து நிறுவனங்கள் மூலம் பருப்பு, பாமாயில் பொருள்கள் வழங்கப்படுகின்றன. இதில் வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் தமிழகம் முழுவதும் 40 இடங்களில் வருமான வரித்துறையினா் சோதனை நடத்தினா்.

இதில் சென்னையைச் சோ்ந்த ஒருவருக்கு சொந்தமான பருப்பு கிடங்கு சேலம், சீலநாயக்கன்பட்டி மேட்டு வெள்ளாளா் தெருவில் உள்ளது. இந்தக் கிடங்கில் வியாழக்கிழமை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிட சென்றனா்.அப்போது அங்குள்ளவா்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் வருமான வரித் துறை அதிகாரிகள் திரும்பிச் சென்றனா். இதைத்தொடா்ந்து வெள்ளிக்கிழமை மாலை வருமான வரித்துறை அதிகாரிகள் சீலநாயக்கன்பட்டியில் உள்ள கிடங்கில் சோதனை நடத்தினா். நள்ளிரவு வரை சுமாா் 8 மணி நேரம் நடந்த இந்தச் சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து வருமான வரித் துறையினா் தொடா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT