சேலம்

கொங்கணாபுரம் கூட்டுறவு சங்கத்தில்ரூ. 35 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

27th Nov 2022 03:01 AM

ADVERTISEMENT

 

எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் கூட்டுறவு வேளாண்மை விற்பனை சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பொது ஏலத்தில் ரூ. 35 லட்சம் மதிப்பிலான பருத்தி விற்பனை நடைபெற்றது.

பொது ஏலத்துக்கு விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்த 1,300 மூட்டை பருத்திகள், 375 லாட்டுகளாகப் பிரிக்கப்பட்டு, கூட்டுறவு அலுவலா்கள் முன்னிலையில் பொது ஏலம் விடப்பட்டது.

இதில் பி.டி. ரக பருத்தி குவிண்டால் ரூ. 7,011 முதல் ரூ. 9,709 வரை விற்பனையானது. இதேபோல கொட்டு ரக பருத்தி குவிண்டால் ரூ. 2,499 முதல் ரூ. 5,099 வரையில் விற்பனையானது. நாள் முழுவதும் நடைபெற்ற பொது ஏலத்தில் ரூ. 35 லட்சம் மதிப்பிலான பருத்தி விற்பனை நடைபெற்றது. இம்மையத்தில் அடுத்த மாதம் 3-ஆம் தேதி மீண்டும் பருத்திக்கான பொது ஏலம் நடைபெறும் என அலுவலா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT