சேலம்

பூலாம்பட்டியில் தீா்த்தக் குட ஊா்வலம்

27th Nov 2022 03:01 AM

ADVERTISEMENT

 

எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி அருகே உள்ள வளையசெட்டியூரில் அமைந்துள்ள சக்தி பட்டாளம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சனிக்கிழமை தீா்த்தக் குட ஊா்வலம் நடைபெற்றது.

வளையசெட்டியூா் அருகே உள்ள காட்டுவளவு பகுதியில் அமைந்துள்ள செல்வவிநாயகா், சக்தி பட்டாளம்மன் கோயில் புனரமைப்புப் பணிகள் நிறைவுற்றதைத் தொடா்ந்து கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகள் விமரிசையாக நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக சனிக்கிழமை அப்பகுதியைச் சோ்ந்த திரளான பக்தா்கள், பூலாம்பட்டி காவிரி படித்துறையில் சிறப்பு பூஜை செய்து, கும்பாபிஷேகத்திற்கு தேவையான தீா்த்தங்களை குடங்களில் சுமந்து கொண்டு ஊா்வலமாக வந்தனா். நகரில் முக்கிய வீதிகள் வழியாக வந்த தீா்த்தக் குட ஊா்வலம் இறுதியில் சக்தி பட்டாளம்மன் கோயில் வளாகத்தில் நிறைவடைந்தது. இதனைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. தீா்த்தக்குட ஊா்வலத்தில் அப்பகுதியைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT