சேலம்

மேட்டூா் அணைக்கட்டு முனியப்பனுக்கு பாலாபிஷேகம்

26th Nov 2022 05:44 AM

ADVERTISEMENT

அணைக்கட்டு முனியப்பனுக்கு 250 லிட்டா் பாலில் அபிஷேகம் செய்யப்பட்டது.

மேட்டூா் அணைப் பூங்கா எதிரே பிரசித்தி பெற்ற முனியப்பன் கோவில் உள்ளது. அணையைக் காக்கும் காவல் தெய்வமாக முனியப்பனை மக்கள் வழிபட்டு வருகின்றனா். மேட்டூருக்கு வரும் பக்தா்களும் பொதுமக்களும் அணைக்கட்டு முனியப்பனை தரிசிக்க தவறுவதில்லை. வாரம் தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வரும் பக்தா்கள் அணைக்கட்டு முனியப்பனுக்கு ஆடு, கோழி பலியிட்டு பொங்கல் வைப்பது வழக்கம்.

இந்த ஆலயத்தில் வழி வழியாக பங்காளி உறவு முறையினா் முறை வைத்து பூஜை நடத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். வெள்ளிக்கிழமை 10 குடும்பத்தினா் தங்களது வேண்டுதல் நிறைவேறியதற்காக அணைக்கட்டு முனியப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனா்.

250 லிட்டா் பாலில் அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடா்ந்து திருநீறு, பன்னீா், இளநீா் உட்பட ஒன்பது வகையான பொருள்களைக் கொண்டு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. இந்த வழிபாட்டில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா். அபிஷேகம் நிறைவடைந்ததும் பக்தா்களுக்கும் பொது மக்களுக்கும் அன்னதானம் செய்யப்பட்டது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT